• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

மருந்து வணிகர் சங்க பொது குழு கூட்டம்..,

ByRadhakrishnan Thangaraj

Jun 22, 2026

விருதுநகர் மாவட்டம் மருந்து வணிகர் சங்க பொது குழு கூட்டம் ராஜபாளையம் ராமதாரி மண்டபத்தில் திரு பாலமுருகன் தலைமையில் செயலர் திரு கணேசமூர்த்தி மாநில செயலாளர் திரு அஷோக் மாநில உதவி தலைவர் திரு கணேசன்,மாநில துணை அமைப்பு செயலர் சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு கெமிஸ்ட் and டிரக்கிஸ்ட் எடுகேஷனல் டிரஸ்ட் உடன் இணைந்து நடத்திய மருந்தளுநர்களுக்கான பயிற்சி வகுப்பும் நடைபெற்றது.

கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி அவர்கள் கலந்துகொண்டு 10 வது மற்றும் 12 வது அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். தமிழ் நாடு மருந்து வணிகர் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட சேம நல நிதி காசோலை அமைச்சர் அவர்களால் மறைந்த உறுப்பினரின் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது. ராஜபாளையம் தாலுகாவிற்கு புதிய பொறுப்பாளர்களாக திரு ராஜரத்தினம்.திரு பார்த்தசாரதி,திரு சுரேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். சங்கத்தின் ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு பொருளாளர் திரு செல்வம் தாக்கல் செய்தார்.

மாநில மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்க 350 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புரவலர் ராஜரத்தினம் நன்றியுரைடன் கூட்டம் நிறைவு பெற்றது.