• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆன்லைனில் பொதுக்குழு!? இபிஎஸின் அதிரடித்திட்டம்

ByA.Tamilselvan

Jul 3, 2022

அதிமுக பொதுக்குழுவை ஆன்லைன் முறையில் நடத்த பரிசீலனை செய்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை இபிஎஸ் தரப்பு மிகத் தீவிரமாக செயல்படுத்திவருகின்றனர். ஓபிஎஸ் தரப்பினர் பொதுக்குழு நடக்காது என சொல்லிவருகின்றனர்.அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே,தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில்,தமிழகத்தில் மேலும் கொரோனா அதிகரித்தால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஆன்லைனில் நடத்துவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஒரு மாற்று திட்டத்தை அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் பரிசீலித்துள்ளதாகவும்,இது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களிடே மோதலை தவிக்கவும் இந்த ஏற்பாடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.எப்படியேனும் ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்தை கூட்டியாகவேண்டும் என் இபிஎஸ் தரப்பு மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
மேலும்குறிப்பாக,கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக பொதுக்குழுவுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத பட்சத்தில் இத்தகைய மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.