• Fri. Nov 14th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கீதாஜீவன் முயற்சியில் பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை..,

தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் ப்ரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் பேசுகையில்: முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் வாரம் ஓருமுறை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. அதையும தவிா்த்து உங்களுடன் ஸ்டாலின் பகுதி சபா கூட்டம் என மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு இத்தனை முகாம்கள்நடைபெற்றாலும் மாநகராட்சி இணையதளம் வாயிலாகவும் பல்வேறு புகாா்கள் குறைகள் வருகின்றன. 

அதையும் தீா்த்து வைக்கும் பணியில் நாம் இருக்கிறோம் மக்கள் தௌிவாக இருக்கிறாா்கள். கடந்த 19 20, 21 ஆகிய 3 தேதிகளில் பெய்த கனமழையால் எங்கும் மழைநீர் பொிய அளவில் தேங்க வில்லை. ஒரு சில இடங்களில் தான் தேங்கியது அதையும் மின்மோட்டாா் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. கோக்கூா் குளம் அமைந்துள்ள பகுதி தாழ்வான பகுதி அதனை சாிசெய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடக்கு மண்டலத்தில் அதிக அளவில் காலி மணைகள் உள்ளது அங்கு தான் மழைநீர் தேங்குகிறது. 

நவம்பர், டிசம்பர், ஜனவரி 10 வரை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலத்தடி நீர் உயா்ந்துள்ளது. வாா்டு 16, 17, 2 ஆகிய பகுதிகள் நீர் தேங்கியுள்ளது. ஆதிபாராசக்தி வழியாக நீர் வௌியே செல்வதற்கு வழியில்லை இதனால் புதிய வழித்தடம் உருவாக்கப்பட்டு எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போா்டு வழியாக கடலுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

பி&டி காலனி புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் பாதாள சாக்கடை பணிகளும் நடைபெற்றதால் 5 அடிக்கு தோண்டப்பட்டது. அதுவும் தற்போது சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 974 சாலைகள் அனுமதி அளிக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. தற்போது சண்முகபுரம் ஜாா்ஜ் ரோடு சந்தை ரோடு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் வாய்கால் கட்டும் பணி நடைபெறுகிறது என்று பேசினார்.

எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி பேசுகையில்: தூத்துக்குடியில் நீண்ட நாட்களாக பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை வழங்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே பத்திரிகையாளர்களுக்கு மாநகராட்சி பகுதியில் மானிய விலையில் வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகர பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் அதிக விலைக்கு விற்கப்படும் திண்பண்டகள் விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக சார்பில் வலியுறுத்தி பேசினார்.

கூட்டத்தில், இணை ஆணையர் சரவணக்குமார், பொறியாளர் தமிழ்செல்வன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர் அகமது, உதவி ஆணையர் வெங்கட்ராமன்;, சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர், கண்ணன், ராஜபாண்டி, மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் கீதா முருகேசன், சுரேஷ்குமார், இசக்கிராஜா, அதிஷ்டமணி, சரவணக்குமார், ரெங்கசாமி, பொன்னப்பன், சரண்யா உள்பட மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர்.”