• Thu. Apr 25th, 2024

கவுதம் அதானி உலகின் பணக்காரர்கள் பட்டியல் 5-ம் இடம்

உலகின் பணக்காரர்கள் வரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் கவுதம் அதானி. இதுவரை ஐந்தாமிடத்தில் இருந்த வாரன் பஃபெட் 6-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்திய பணக்கார்ர்களில் பட்டியலில் 30 ஆண்டுகளுக்கு முன் டாட்டா,பிர்லா இருந்தார்கள்.பின்பு அம்பானி சகோதரர்கள் அந்த இடங்களை பிடித்தனர். இந்திய அளவில் மட்டுமல்ல உலக பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார்கள்.கடந்த சில வருடங்களாக அதானி அந்த இடத்தை பிடித்துள்ளார்.வருடந்தோறும் அவரது சொத்து மதிப்பு உயர்ந்து வருகிறது. தற்போது
போர்ப்ஸ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் கவுதம் அதானி மொத்த சொத்து மதிப்புத் நேற்று காலை வர்த்தக நிலவரப்படி ரூ.9.40 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதன் மூலம் 5வது இடத்தில் ரூ.9.25 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இருந்த வாரன் பபெட் 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 4 இடங்களில் முறையே, டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் ரூ.20.50 லட்சம் கோடி, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ரூ.12.93 லட்சம் கோடி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் ரூ.12.76 லட்சம் கோடி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ரூ.9.89 லட்சம் கோடி உடன் உள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் அதானி உலகின் முதல் பணக்காரர் இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *