

இயற்கை வனப்பரப்பு நிறைந்த நீலகிரி மாவட்டம், ஆசியாவிலேயே சிறந்த உயிர்சூழல் மண்டலத்துக்குள் அமைந்துள்ளது. இந்த உயிர்சூழல் மண்டலத்தில் வன விலங்குகளை தவிர பருந்து, கழுகு, இருவாச்சி, மயில், குயில், மரங்கொத்தி, மைனா, புஷ்சாட், பீ- ஈட்டர், புல்புல், திரஷ், டிராங்கோ உட்பட பல வகை பறவையினங்கள் உள்ளன.
மேலும், ஓரியண்டல் ஒயிட் ஐ, இந்தியன் புளு ராபின், கிரேட் டிட், ஆரஞ்சு அண்டு பிளேக் பிளை கேட்சர், நீலகிரி பிளை கேட்சர், வேக் டைல் போன்ற பறவைக ளையும் அடிக்கடி காண முடிகிறது.
நீலகிரி பிளை கேச்சர் எனப்படும் பறவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், காபி தோட்டங்கள், சோலை வனங்களில் காணப்படுகின்றன. குறிப்அபாக ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் பழப் பண்ணை போன்றவற்றில் பல வகை பறவைகள் வரு கின்றன. இது தவிர, சதுப்பு நிலங்கள் மற்றும் நீர் நிலைகளில் காணக்கூடிய சாம்பர் நாரை, ஸ்பாட் பில் டக், கேட்டில் ஈகிரட், காமன் கூட் போன்ற நீர் பறவைகளும் அதிகளவு வந்துள்ளன. இவைகள் ஊட்டி ஏரி, கிளன்மார் கன், பைக்காரா அணை, மாயார் போன்ற நீர் நிலை கள் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் காணப்படும் சிறு நீர் குட்டைகள் போன்றவற்றிலும் காண முடிகிறது. நீலகிரியில் உள்ள மற்றும் வலசை வந்துள்ள பறவை களை ஆய்வு செய்யவும் அவற்றை புகைப்படம் எடுக்கவும் ஏராளமான பறவைகள் ஆர்வலர்கள் குவிந்துள்ளனர். அவர்கள் பறவைகள் அதிகம் காணப்படும் ஊட்டி, குன்னூர், முதுமலை, கோத்த கிரி உள்ளிட்ட பகுதிகளில் பறவை நோக்குதல் (பேட் வாட்சிங்) எனப்படும் பற வைகளை பார்வையிடுதல், வாழ்வுமுறை, உணவு முறை கண்காணித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நவம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர் காலங்களில் வடமாநிலங்களில் இருந்து பல வகை பறவையினங்கள் நீலகிரிக்கு வலசை வரும். கிரீன் லீப் வாப்லர் போன்ற சில பறவையி னங்கள் பனிக்காலத்தில் இமாலய பகுதிகளில் இருந்து வருகின்றன.
