• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் – ராகுல் காந்தி

ByA.Tamilselvan

Sep 5, 2022

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ500க்கு காஸ்சிலிண்டர்கள் வழங்கப்படும் என ராகுல்காந்தி பேச்சு.
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசும் போது..குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும், பொது நுகர்வோருக்கு 300 யூனிட் இலவச மின்சாரமும் வழங்கப்படும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். 3,000 ஆங்கில வழிப் பள்ளிகளைத் திறந்து, பெண்களுக்கு இலவசக் கல்வியை வழங்குவோம். பா.ஜ.க. அரசு ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடியது. பால் உற்பத்தியாளர்களுக்கு 5 ரூபாய் மானியம் வழங்கப்படும். தற்போது 1,000 ரூபாய்க்கு விற்கப்படும் காஸ் சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றார்.மேலும் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.