• Thu. Feb 13th, 2025

கங்குலி, ஜெய் ஷா பதவியில் தொடரலாம்… உச்ச நீதிமன்றம் அனுமதி

ByA.Tamilselvan

Sep 14, 2022

கங்குலி, ஜெய் ஷா பதவியில் தொடரலாம்… பிசிசிஐ விதிகளை மாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றில் உள்ள நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட விதிகளில் மாற்றம் செய்ய அனுமதி கோரி பிசிசிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது பி்சிசிஐ-யில் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தால் மூன்று ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் பதவி வகிக்க முடியும் என்று விதி உள்ளது. கட்டாயம் இடைவெளி விட வேண்டும் என்ற இந்த விதியை (cooling-off period) மாற்ற அனுமதிக்கும்படி பிசிசிஐ தனது மனுவில் தெரிவித்திருந்தது.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, சட்ட விதிகளை மாற்ற பிசிசிஐக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், கிரிக்கெட் சங்கத் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் பதவியில் தொடரமுடியும். மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஆறு ஆண்டுகள் மற்றும் பிசிசிஐயில் ஆறு ஆண்டுகள் என நிர்வாகிகள் 12 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. பிசிசிஐயில் ஒருவர் ஒரு பதவியில் இரண்டு முறை தலா 3 ஆண்டுகள் தொடர்ந்து பதவி வகிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.