• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

குமரியில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கரைப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட பாஜக பொருளாளரான முத்துராமன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மூன்றடி உயர விநாயகர் சிலை போலீஸ் பாதுகாப்புடன் அப்பகுதியில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.

அதேபோல் இந்து முன்னணி சார்பில் தத்தையார் குளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிறிய வடிவிலான விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கோதையார் அணைக்கட்டில் கரைத்தனர்.

மேலும், இந்துமகா சபா சார்பில் நாளை 250 க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைப்பெறும் என்பதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.