

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கொச்சின் – மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள பால விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது .
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்படவில்லை .தற்போது கொரோனா விதிமுறைகள் தளர்வு செய்து கொள்ளப்பட்டதால் பக்தர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். விழாவை முன்னிட்டு நேற்று காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மூலவருக்கு பாழ் ,பழம், தயிர் ,பன்னீர் உள்ளிட்ட பல வகையான அபிஷேகங்கள் நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து பகல் மற்றும் இரவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது .மூலவர் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
