• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கமலை பின்பற்றி விஜய்சேதுபதி நடிக்கும் “காந்தி டாக்ஸ்”

ByA.Tamilselvan

Oct 2, 2022

நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த” பேசும்படம்” போலவே தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் காந்தி டாக்ஸ் படமும் மவுனபடமாக வெளிவர உள்ளது.
1987ல் கமல் நடிப்பில், பேசும்படம் வெளிவந்தது. இதில் நடித்தவர்கள் யாரும் பேசாமல், பின்னணி இசையை மட்டும் சேர்த்திருந்தனர். நடிகர் கமல் ,நடிகை அமலா நடித்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.வித்தியாசமான இந்த முயற்சியை பலரும் பாராட்டினர். அதன் பின், இவ்வித முயற்சியை யாரும் செய்யவில்லை.
இந்நிலையில், 35 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் மவுனப்படம் எடுக்கப்பட உள்ளது. காந்தி டாக்ஸ் என்ற இப்படத்தில், விஜய்சேதுபதி, அதிதி ராவ்,அரவிந்தசாமி நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை கிஷோர் பி.பெலேகர் இயக்குகிரார். இப்படம் முழுக்க முழுக்க வசனங்களே இல்லாமல் மவுனப்படமாக உருவாகியுள்ளது. மவுனப்படம் என்பதால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது.படத்தின் முதற்கட்ட வேலைகள் துவங்கியுள்ளன.