புதுக்கோட்டை மாநகராட்சி உட்பட்ட பகுதியான மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முதல் டிவிஎஸ் கார்னர் வரை மாடுகளால் பெரும் அவஸ்தை என பொதுமக்கள் கூறி வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மாடுகளுக்கு மனு கொடுத்து விரட்டும் போராட்டம் நடைபெற்றது.

இதில் பொன்வசிநாதன் அவர்கள் தலைமையில் கருப்பையா கனகராஜ் குணசேகரன் செபாஸ்டின் அப்பாஸ் சண்முகம் வீரப்பன் பிரபாகரன் அன்பரச கலைச்செல்வன் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது




