• Thu. Mar 23rd, 2023

வாட்ஸ் அப்பில் இனி, குரல் பதிவையும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்..!

ByA.Tamilselvan

Jul 16, 2022

வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புது புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி ஆடியோ செய்தியையும் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதி உள்ளதாக தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் மனநிலையை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ல் வைத்து வெளியிடுவர்.
ஏற்கனவே புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டுமே ஸ்டேட்டஸாக வைக்கும் வசதி உள்ள நிலையில், தற்போது ஆடியோவையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த ஆடியோ ஸ்டேட்டஸ், வழக்கமான ஸ்டேட்டஸ் போன்று எழுத்து, எமோஜியை பயன்படுத்தி வைக்கலாம். அதுமட்டுமின்றி, வழக்கமான ஸ்டேட்டஸ் போன்று இதையும் வாட்ஸ்அப் பயனர்கள் தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே காண்பிக்கும் வகையில் இருக்கிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் பயனர்களிடம் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *