• Sun. Sep 15th, 2024

1,800 பேர் வேலை காலி – மைக்ரோசாப்ட் அதிரடி

ByA.Tamilselvan

Jul 15, 2022
மைக்ரோசாப்ட் நிறுவனம் வணிக முன்னுரிமை   அடிப்படையில் 1800 பணியாளர்களை  பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் அதன் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக பல்வேறு பிராந்தியங்களில் பணியாற்றி வந்த 1,800 பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. ஜூன் 30 அன்று அதன் நிதியாண்டு முடிவடைந்த பிறகு வணிகக் குழுக்கள் மற்றும் மறுசீரமைத்தல் காரணமாக சில பணியாளர்களை குறைத்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து புதியதாக பணியாளர்களை பணியமர்த்துவோம் என்றும் நடப்பு நிதியாண்டில் அதிகமாக பணியாளர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
“தற்போது சிறிய எண்ணிக்கையிலான பணி நீக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். எல்லா நிறுவனங்களையும் போலவே, நாங்கள் எங்கள் வணிக முன்னுரிமைகளை வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்து, அதற்கேற்ப சில கட்டமைப்பு மாற்றங்களைச் செய்கிறோம். நடைபெற்ற மொத்த பணிநீக்கங்கள் 1.8 லட்சம் கொண்ட மைக்ரோசாப்டின் மொத்த பணியாளர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன” என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *