• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் சரக்கு ரயில் தடம்புரண்டது

ByA.Tamilselvan

Apr 25, 2022

மதுரையில் சரக்கு ரயில்தடம்புரண்டது இதனால் மதுரையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ். குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்கள் காலதாமதமாக புறப்பட்டது.
கூடல் நகரில் இருந்து சரக்கு ரயில் மதுரைக்கு பராமரிப்பிற்காக வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலின் கடைசி சரக்குபெட்டியின் ஒரு சக்கரம் மதுரை செல்லூர் அருகே ரயில் பாதையை விட்டு இறங்கியது. இதனால் மதுரையில் இருந்து புறப்பட்டு சென்ற குருவாயூர்- சென்னை ரயில் வண்டி மதுரை பாலம் பகுதியில் நிறுத்தப்பட்டது.சீரமைப்பு பணி விரைவாக நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் நாகர்கோவில் விரைவு ரயில் தற்போது சமயநல்லூரில் நிறுத்தப்பட இருக்கிறது.விபத்து சீரமைப்புக்கு வசதியாக பாதிக்கப்பட்ட சரக்கு பெட்டியும் மற்றும் இரண்டு பெட்டிகளும் தவிர மற்ற சரக்கு பெட்டிகள் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டன.
மதுரையிலிருந்து மதியம் மூன்று மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை – சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் சிறிது கால தாமதமாக புறப்படும்.