• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தங்கநகை மதிப்பீட்டாளர்களுக்கு இலவச பயிற்சி

Byவிஷா

Jan 30, 2024

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக, சென்னையில் தங்க நகை மதிப்பீடாளர்கள் இலவச பயிற்சி வருகின்ற பிப்ரவரி 8-ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில் தங்கம், செம்பு, வெள்ளி மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட உலோக தரம் அறிதல், விலை நிர்ணயிக்கும் முறை மற்றும் ஆபரண கடனுக்கான கணக்கிட்டு முறை, போலியான நகைகளை அடையாளம் காணுதல் ஆகியவை கற்றுத் தரப்படும்.
மேலும் முன்பதிவு குறித்த கூடுதல் விவரங்களை அறிவதற்கு www.editn.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 044 22202081 ஃ 22202082 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.