• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி

ByKalamegam Viswanathan

Jun 13, 2025

சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச நோட்புக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி திருவாலவாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஜயலட்சுமி அறக்கட்டளை சார்பில், இலவச நோட்புக் எழுதுபொருள் ஸ்கூல் பேக் உள்ளிட்ட பொருட்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் அழகசுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சகுபர் சாதிக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நோட்புக் எழுது பொருட்களை வழங்கினார். பள்ளி ஆசிரியை ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளிக்கு இரண்டு மின்விசிறிகளும் வழங்கப்பட்டது.