தேனி மாவட்டம், கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட், தேனி ஹோலி ரெடிமர் மருத்துவமனை இணைந்து நடத்திய சர்க்கரை மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை முகாமில் பலர் பங்கேற்றனர்.
காமாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசின் முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி பெ.செல்வேந்திரன் தலைமை வகித்தனர்.
கம்பம் லயன்ஸ் கிளப், கம்பம் மெடிக்கல், சாரா கிப்ட் & டாய்ஸ், விஸ்வகர்மா ஐக்கிய சங்கம் இணைந்து நடத்திய இந்த முகாமில், மருத்துவர்கள் சுமதி, ராஜம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனைகள் செய்தனர்.
பொது மருத்துவம் மட்டுமின்றி சர்க்கரை, கர்ப்பிணி பெண்களுக்கான பிரத்தியேக பரிசோதனை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு, கால்சியம், வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு குறித்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. தேவைப்படுவோருக்கு அதற்கான மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், பி.சி.ஓ.டி., மற்றும வயிற்றுப் பரிசோதனைகளும் செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
கர்ப்பிணிகள், பெண்கள், முதியோர், சிறுவர், சிறுமியர் என நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை பிளெஸ் ஆல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஏ.கே.பார்த்திபன், நிதி அறங்காவலர் ‘ஏசி ஸ்டூடியோ’ குபேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.