விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே நெசவாளர் முன்னேற்ற கழகம் மற்றும் கலசலிங்கம் மருத்துவக் கல்லூரியும் இணைந்து நடத்திய 44–ஆவது இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இராஜபாளையம் அருகே அய்யனாபுரம் கிராமத்தில் தனியார் கலையரங்கத்தில் நடைபெற்ற முகாமை இராஜபாளையம் முருகன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கா.மாரியப்பன் துவக்கி வைத்தார்.


நெசவாளர் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை மற்றும் செவித்திறன் குறைபாடு மற்ற பொது மருத்துவம் மற்றும் பரிசோதனை குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாட்டை நெசவாளர் முன்னேற்ற கழகம், மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் செய்திருந்தனர்.




