

ஸ்டார் ஆரோக்கிய டிஜி சேவா சார்பில் ஆலந்தூர் பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஸ்டார் ஆரோக்கிய டிஜி சேவா சார்பில் இல்லம் தேடி மருத்துவம் என்ற நோக்கில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு பல தரப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஆலந்தூர், மாரிசன் சாலையில் ஸ்டார் ஹெல்த் சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ், CCDC உடன் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாநகர் கிளை மேலாளர் சிவகுமார் மற்றும் சென்னை 1 ஜோனல் அணி உறுப்பினர்கள் இணைந்து மருத்துவ முகாமை சிறந்த முறையில் வழிநடத்தினர்.

நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமில் ஆலந்தூர் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று இலவசமாக சர்க்கரை பரிசோதனை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை இருமல், காய்ச்சல் போன்ற பரிசோதனைகளை இலவசமாக பார்த்து பயன் அடைத்தனர், மேலும் ஸ்டார் ஆரோக்கிய டிஜி சேவா சார்பில் அனைவருக்கும் மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் ஸ்டார் ஆரோக்கிய நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் செவிலியர்கள் மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


