• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்

Byஜெ.துரை

Mar 26, 2023

சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனை
மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது:
திருவான்மியூர் அரிமா சங்கம் மற்றும் சென்னை ஆற்காடு சாலை அரிமா சங்கமும் இணைந்து அரவிந்த் கண் மருத்துவமனை தலைமையில் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் கண் அறுவை சிகிச்சை ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த இலவச சிறப்பு முகாமை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.எம்.வி பிரபாகராஜா துவக்கி வைத்தார். இந் நிகழ்வில் அரிமா சங்க மாநில தலைவர் இளங்கோ மாணிக்கம், வட்டார தலைவர் என்.எஸ். பாலசுப்ரமணியம், ஆர்.ராஜ்குமார், செயலாளர் ஜி.ரவி, ஆர்.ரகுநந்தன், லயன் ரவிச்சந்திரன்,வித்யா, எம்.எஸ்.பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் அந்தப் பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.