• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

ByKalamegam Viswanathan

Oct 18, 2024

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 274 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வெங்கடேசன் எம். எல். ஏ. வழங்கினார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 274 மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் தீபா வரவேற்புரை ஆற்றினார். பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன் பேரூராட்சி கவுன்சிலர்கள் கொத்தாலம், செந்தில்வேல், செல்வராணி மாணவரணி எஸ். ஆர். சரவணன் முட்டை கடை காளி, முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி, ஐயப்பன், ஆர்.ஆர். ரவி திருவேடகம் ராஜா என்ற பெரிய கருப்பன் தவம் சபாபதி ஆர். ஆர். ரவி சந்திரன், மணிபாண்டி, சௌந்தர பாண்டியன் திமுக மூத்த உறுப்பினர் அருணா உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.