சோழவந்தான் அருகே அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஐயப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுன் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் வக்கீல் முருகன் துணை அமைப்பாளர் மணி வேல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் செல்வம் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன்மாறன் 40 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். ஆசிரியர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.