• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி..,

ByS.Ariyanayagam

Dec 11, 2025

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக திண்டுக்கல் பெண்ணிடம் ரூ.92 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு, ஆலம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி நாகலட்சுமி(50) இவரது மகனுக்கு திருச்சி விமான நிலையத்தில் மேலாளர் வேலையும் உறவினர் மகள் கீர்த்தனாவுக்கு உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக ராஜா மற்றும் கார்த்திகேயன்(எ) கௌரிசங்கர் ஆகியோர் வார்த்தை கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி பல்வேறு தவணைகளாக ரூ.92,11,308 பெற்றுக் கொண்டு பணி நியமன ஆணை இருப்பதாக கூறி கவரை கொடுத்தனர் அதில் என் மகனுடைய ஆதார் அட்டை பான் அட்டை நகல் மட்டுமே இருந்தது இது குறித்து மாவட்ட எஸ்பி. பிரதீப் அவர்களிடம் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி.குமரேசன் தலைமையிலான போலீசார் ராஜா மற்றும் கௌரிசங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கவுரிசங்கர் மற்றொரு மோசடி வழக்கில் ஏற்கெனவே கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ளார்