


ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோ எடுத்த யூடியூப் பிரபலங்கள் உட்பட நான்கு பேர் கைது…
ஸ்ரீவில்லிபுத்தூரில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதாக கூறி, சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்து வீடியோ எடுத்த யூடியூப் பிரபலங்கள் உட்பட நான்கு பேரை ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 15 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு டிக்டாக் பிரபலம் திவ்யா பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூப் பிரபலம் கார்த்திக் மற்றும் சித்ரா அளித்த புகாரில் ஶ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அதில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானதை அடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி அளித்த புகாரில் ஶ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ வழக்கு பதிவு செய்து, யூடியூப் பிரபலங்கள் திவ்யா, கார்த்திக், சித்ரா மற்றும் ஆனந்த் ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி சூரியமூர்த்தி, டி.எஸ்.பி ராஜா, இன்ஸ்பெக்டர் மலையரசி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அதில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதாக கூறி 15 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்களுக்கு திவ்யா பாலியல் தொல்லை அளித்ததும், அதற்கு கார்த்திக் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. சித்ரா கூறியதன் பேரில் திவ்யா சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததை ஆனந்த் வீடியோவாக பதிவு செய்து சித்ராவிற்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை காட்டி சித்ரா, கார்த்தி மற்றும் திவ்யாவை மிரட்டியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து திவ்யா, கார்த்திக், சித்ரா, ஆனந்த் ஆகியோர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீஸார் 4 பேரையும் கைது செய்தனர்.


