• Mon. Apr 21st, 2025

மக்கள் சேவை மைய அமைப்பின் 21வது ஆண்டு துவக்க விழா…

ByT. Vinoth Narayanan

Jan 30, 2025

திருவில்லிபுத்தூர் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு மனிதநேய உதவிகள் செய்து வரும் மக்கள் சேவை மைய அமைப்பின் 21வது ஆண்டு துவக்க விழா…

திருவில்லிபுத்தூர் அருணாச்சலம் வள்ளியம்மாள் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இவ்வமைப்பின் தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். இவ்வமைப்பின் ஸ்தாபகரில் ஒருவரும் செயற்குழு உறுப்பினருமான பேராசிரியர் சுரேஷ் தளியத் வரவேற்புரை நிகழ்த்தினார். அமைப்பின் செயல்பாடுகள் பற்றி செயலாளர் ரவீந்திரநாத் விளக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் ராஜபாளையம் ஸ்ரீ நிருத்திய சாய் நாட்டிய கலைப் பள்ளி நாட்டிய பயிற்சியாளர் கண்ணன் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் இவ்வமைப்பின் துவக்க விழாவாகவும், குடும்பக்கலை விழாவாகவும், சாதனையாளர்கள் பாராட்டு விழாவாகவும் முப்பெரும் விழாவாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருவில்லிபுத்தூர் நகர் மன்ற தலைவர் த.தங்கம், ரவிக்கண்ணன், சீனியர் சிவில் சர்ஜன் பணி ஓய்வு மருத்துவர் A. சிதம்பரநாதன் துணைவியார் வேதவல்லி ராஜம் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி தமிழ் துறை தலைவர் பேராசிரியர் வி. கலாவதி சேகர் திருவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலர் செல்வி எம்.மனோரஞ்சிதம் ஆகியோர் பங்கேற்ற சிறப்பித்தனர் .இந்த விழாவில் இந்த அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் பசுமைக் காவலர்கள் இயற்கை விவசாயிகள் கின்னஸ் சாதனையாளர்கள் பாரா ஒலிம்பிக் சாம்பியன் இளம் மருத்துவர்கள் மருத்துவ மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் நல் ஆசிரியர்கள் யோகா ஆசிரியர்கள் சிலம்பாட்ட ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செவிலியர்கள் மேலாளர் நல்வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு நகர்மன்ற தலைவர் த. தங்கம் ரவிகண்ணன் மூத்த மருத்துவர் A. சிதம்பரநாதன் திருவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலர் செல்வி எம். மனோரஞ்சிதம் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி கைத்தறி ஆடை அணிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் இவ்வமைப்பின் துணைத்தலைவர் பாலசுப்ரமணியன் துணைத்தலைவர் மாணிக்கம் இணைச் செயலாளர் திருப்பதி முனிராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் காளிமுத்து, சுரேஷ் கண்ணன், ராமராஜ் சங்கர், சோமசுந்தரம், கமலவேணி, சுப்புலட்சுமி, ஆர்.முத்துக்குமாரசாமி ஆர்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த அமைப்பின் பொருளாளர் தனலட்சுமி, பாண்டியராஜா நன்றியுரை நிகழ்த்தினார். இந்த சிறப்பான நிகழ்ச்சியை இந்த அமைப்பின் செயல் தலைவர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைத்து செயல்பட்டார். இவ்விழாவில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.