• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது..,

ByK Kaliraj

Jun 12, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு உரிமம் தடை விதிக்கப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்வதற்காக சிவகாசி தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் சந்திரமோகன், உதவி இயக்குனர் அஜித்குமார், ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன், கிருஷ்ணன்கோவில் போலீசார் தலைமையில் சோதனை நடைபெற்றது.

கீழத்தாயில்பட்டியில் மூர்த்தி (75 ) என்பவருக்கு சொந்தமான பட்டாசாலை உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அந்த பட்டாசுஆலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து சிறப்பு குழுவினர் பட்டாசு ஆலையை ஆய்வு செய்தனர். அப்போது சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி நடைபெற்ற தெரியவந்தது. உடனடியாக கணக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேசன் வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விரைந்து வந்து உற்பத்தி செய்யப்பட்ட ஐந்து பெட்டியில் இருந்த சோல்சா வெடிகள், மற்றும் மூலப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட வெள்ளைச்சாமி (43) சஞ்சீவராஜ் (46 ) மாடசாமி (37) செல்வம் (48 ) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.