• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ மகா சுதர்சன மகா யாகம் அடிக்கல் நாட்டு விழா..,

ByPrabhu Sekar

Feb 8, 2026

சென்னை புழுதிவாக்கத்தில் உலக அமைதி மற்றும் மக்கள் நலன் வேண்டி நடைபெற உள்ள 1008 குண்டங்கள் கொண்ட ஸ்ரீ மகா சுதர்சன மகா யாகத்திற்கான யாகசபை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

நங்கநல்லூரைச் சேர்ந்த டாக்டர் பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில், இந்த மகா யாகத்தின் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன.

அதன் முதல் கட்டமாக, யாகசாலை அமைப்பதற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி மற்றும் பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.

சுதர்சனப் பெருமானின் அருளைப் பெறும் நோக்கில் நடைபெற்ற இந்த தொடக்க விழாவில், பல பக்தர்கள் கலந்து கொண்டு யாகசாலை அமைக்கப்பட உள்ள இடத்தில் பந்தல்கால் நட்டு பூஜை செய்தனர்.

உலக அமைதி, இயற்கை சமநிலை மற்றும் மக்கள் நலன் வேண்டி விரைவில் நடைபெற உள்ள இந்த 1008 குண்டங்கள் கொண்ட ஸ்ரீ மகா சுதர்சன மகா யாகம் பக்தர்களிடையே பெரும் ஆன்மீக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.