• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

52 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்

நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 52 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 1971 ஆம் வருடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு 1971 வருடத்தின் முன்னாள் மாணவரும் தற்போதைய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்.52 வருடங்கள் கழித்து இல் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்டு தங்களது அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.அதனை தொடர்ந்து பள்ளியின் வளர்ச்சி குறித்தும் மற்றும் பள்ளிக்கு ஏதேனும் உதவி செய்வது என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 1971 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் பள்ளியின் தற்போதைய தலைமையாசிரியர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.