• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

மதுரை காமராஜர்பல்கலை.யில் பணியாளர்களை நீக்கியதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்

ByKalamegam Viswanathan

Feb 21, 2023

மதுரை காமராஜர்பல்கலை.யில் தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் பணிநீக்க் செய்யப்பட்டதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மதுரை காமராஜர் பல்கலைக்கழக 136 தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய பணியாளர் சங்கத்தின் சார்பாக இன்று 21/02/2023 காலை 11.45 மணியளவில் 136 பணியாளர்களை நீக்கியதற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக 136 தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய சங்க தலைவர் மு. வீரபாண்டி தலைமை தாங்கினார்.

செயலாளர் நாகரோகினி முன்னிலை வகித்தார் பொருளாளர் மு.செந்தில்குமார் எழுச்சி உரையாற்றினார் மற்றும் இதர நிர்வாகிகள் எழுச்சி உரையாற்றினார். இதற்க்கு நெடுஞ்சாலைத்துறை மாநில பொருளாளர் ரா. தமிழ் அவர்கள் வாழ்த்தி பேசினார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் க. நீதிராஜா நிறைவு உரையாற்றினார், மதுரை காமராஜர் பல்கலைக்கழக 136 தற்காலிகம் மற்றும் தொகுப்பூதிய சங்க நிர்வாகி மு. செந்தில்குமார் நன்றி கூறி நிறைவு செய்தார்.