• Fri. Apr 19th, 2024

கேரளா தமிழ்நாடு வனப்பகுதியில் காட்டுத்தீ

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கிண்ணக்கொரை வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி மலமலவன பரவியதில் காடுகள் முழுவதும் கருகியது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் டிசம்பர் ஜனவரி பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப்பொழிவுகள் அதிக அளவில் இருந்தது மைனஸ் டிகிரியை தொட்டது கடும் பனிப்பொழிவாள் புர்கள் செடி கொடிகள் காய்ந்து வறண்டு கிடைக்கின்றன பகல் நேரங்களில் வெப்பமும் இந்நிலவே வருகின்றன சிறிதளவு தீப்பொறி பட்டால் கூட மலமலதன பரவும் நிலையில் அனைத்தும் மழையின்றி காய்ந்து கிடக்கின்றன நேற்று மாலை தமிழ்நாடு கேரளா ஒட்டி உள்ள பகுதியில் கிண்ணக்கொரை இரிய சிகை என்ற அடர்ந்த வனப்பகுதியில் தீ பத்தி எரிவதை வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த வனத்துறையினரும் பொதுமக்களும் பரவி வரும் தீயினை அணைக்கும் முயற்சியில் இரவு பகலாக ஈடுபட்டனர் இரவு முழுவதும் குபு குபு என எரிந்த தீயின் வேகம் மரங்கள் செடிகள் கொடிகள் முப்புதுறுகள் என அனைத்தும் எரிந்து சாம்பலானது தீயின் வேகத்தால் வனவிலங்குகள் அங்கும் இங்குமாக ஓடி பாதுகாப்பான இடத்தைத் தேடித் சென்றது மற்ற இடங்களுக்கும் தீ பரவாமல் இருக்கும் வகையில் வனத்துறையினரும் பொதுமக்களும் வனப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *