• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம்- சோனியா, ராகுல் காந்தி மரியாதை

ByA.Tamilselvan

Oct 31, 2022

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இதற்கிடையே, இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “பாட்டி, நான் உங்கள் அன்பு மற்றும் மதிப்பு இரண்டையும் என் இதயத்தில் சுமந்துகொண்டிருக்கிறேன். உங்கள் உயிரை தியாகம் செய்த இந்தியாவை சிதைக்க நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார். .