பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல. எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், வன்முறையை கையில் எடுக்கக் கூடாது என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக அரசை தொந்தரவு செய்வது பாஜகவின் நோக்கமல்ல, மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, இன்னும் சிறப்பாக கடமையை செய்வதற்குதான்.
கூடுதல் தாக்குதல் நடக்காமல் போலீஸ் நடவடிக்க எடுத்தது. முன்கூட்டியே மத்திய உளவுத்துறை எச்சரித்தும், தவறுகள் நடந்துள்ளது. தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது. கோவை மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். கோவை சம்பவத்தில் எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை. பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல. எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது. குற்றவாளிகளை ஒரு மதத்தைச் சேர்ந்தவர் எனக் கூறவில்லை. ஐ.எஸ் கொள்கை தவறு என இஸ்லாமிய குருமார்களே கூறுகின்றனர். பாஜகவின் கருத்து யாருக்கும் எதிரானது அல்ல” என்றார்.