• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திமுக-வினரால் தாக்கப்பட்ட முன்னாள் எம் எல் ஏ வீட்டிற்கு நேரில் சென்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆறுதல்..,

மதுரை மாவட்டம் கருவூனூரில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினரை அப்பகுதி திமுகவினர் கொடூரமாக தாக்கி அவரது வீடுகள் சூறையாடி, வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறை சம்பவத்தை நடத்தினர். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சரும், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் கடும் கண்டனத்தை தெரிவித்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் இல்லத்திற்கு சென்று சேதாரமடைந்த வீட்டையும்,  தீயினால் கொளுத்தப்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பார்வையிட்டு அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. வீட்டின் உள்ள நுழைந்து வீட்டில் பத்திரத்தை இரவில்  எடுத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து குடும்பத்தார் அச்சத்தில் உள்ளனர். ஆகவே சட்டரீதியாக உரிய பாதுகாப்பை குடும்பத்தாருக்கு மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். தொடர்ந்து தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதால் தமிழகமே வன்முறை நாடாக மாறிவிட்டது என கூறினார்.