பேரையூர் T.கல்லுப்பட்டி சாலையில் அமைந்துள்ள KR கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக பள்ளிகளுக்கு இடையேயான யோகா போட்டி 3 பிரிவுகளின் அடிப்படையில் 26ம்தேதியான இன்று பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் பேரையூர், T.கல்லுப்பட்டி, ஏழுமலை, சாப்ட்டூர், T.குன்னத்தூர், மேலப்பட்டி, அத்திப்பட்டி போன்ற பல்வேறு இடங்களில் இருந்து மாணவ மாணவிகள் பெருந்திரளாக யோகா போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இப்போட்டியை திறம்பட நடத்துவதற்காக சிறப்பு விருந்தினர்கள்., தேசிய அளவிலான பரிசுகளை பெற்ற யோகா ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் திறமைகளை கண்டு அவர்களுக்கான பரிசுகளை அறிவித்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் அசாருதீன் யோகா பயிற்சியாளர், முள் படுக்கை மீது, ஐஸ் கட்டி மீது, தலை கவசத்தின் மீதும் யோகா செய்து மாணவர்களை ஆச்சரியபடும்படி செய்து காட்டினார்.
இந்நிகழ்ச்சியை கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் உயர்திரு கே.பாண்டியராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கல்லூரியின் முதல்வர் யோகா கின்னஸ் உலக சாதனையாளர் செந்தில்குமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் வன்னியராஜன் மற்றும் பேராசிரியர்களின் துணையோடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறப்பாக கலந்து கொண்ட பள்ளிகளுக்கும் சிறப்பு பரிசும் ஒவ்வொரு பிரிவுகளின் அடிப்படையில் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.