• Tue. Apr 30th, 2024

வாகனம் வாங்கும் கனவு பகல் கனவுதான்.., கொதிக்கும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

திமுக அரசு சொத்து வரி உயர்வு ,மின் கட்டணம் உயர்வு, குப்பை வரி உயர்வு, கழிவுநீர் இணைப்பு கட்டணம் , பால் விலை உயர்வோடு சாலை வரி உயர்வால் சொந்த வாகனம் வாங்கும் கனவு பகல் கனவாக போய்விடும் என கொதிக்க தொடங்கி இருக்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்..,

இது பற்றி விரிவாக நம்மிடம் பேசிய முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்..,

2021 ஆண்டில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர்பார்த்தனர்.அந்த எதிர்பார்ப்பை தகர்த்து எறியும் வகையில் தொடர்ந்து திமுக அரசு சொத்து வரி உயர்வு ,மின் கட்டணம் உயர்வு, குப்பை வரி உயர்வு, கழிவுநீர் இணைப்பு கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு இப்படி விலைவாசியை உயர்த்தி மக்களுக்கு வேதனைகளையும், கண்ணீரைத் தான் தந்து கொண்டிருக்கிறது.

தற்போது சாலை வரி உயர்வு குறித்து தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தி இருப்பது உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. 5 சகவீதம் வரி உயர்வு மூலம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது ஆகும்.அதேபோல் மோட்டார் வாகன வரியை உயர்த்தப் போவதாகவும் செய்தி வருகிறது இந்த வரி உயர்வால் வாகனங்கள் விலை உயரும்.

இப்போது நிலவரப்படி 15 ஆண்டுக்கான சாலை வரியை வாகனங்களில்  இருந்து 8 சவீதமாக வசூலிக்கப்படுகிறது. இனி இரு சக்கர வாகனங்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் 10 சகவீத வரியும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 10 முதல் 20 சகவீதம் வாகனங்களின் விலை ஏற்றபடி வரிகள் உயர்த்த படலாம்.

2022,2023 ஆம் ஆண்டில் போக்குவரத்து துறையில் 6,674 கோடி வருவாய் வந்தது. தற்போது திமுக அரசு மேலும் வரி விதித்தால்1,000 கோடி கிடைக்கும் இதனால் மக்களுக்கு மிகப்பெரிய சுமை ஏற்படுகிறது.

2022,2023 ஆம் ஆண்டில் 14.77 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 12.5 லட்சம் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது இந்த வரி உயர்வால் லாரி வாடகை கட்டணம் உயரும், அதன் மூலம் காய்கறி உள்ளிட்ட அத்யாவசிய பொருள்கள் கடுமையாக உயர்ந்து மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். 

 சாமானிய மக்களின் சொந்த வாகனம் என்பது பகல் கனவாக போய்விடும். இதைத்தான் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக கணித்து எடப்பாடியார் விரிவான புள்ளி விவரத்தை வெளியிட்டு சாலை வரியை உயரத்த கூடாது என்று அறிக்கை வெளியிட்டார்.

 சாலை வரிக்கு அக்கறை காட்டும் முதலமைச்சர் ஒழுங்காக சாலை அமைக்க முன்னுரிமை அளிப்பாரா? என மக்கள் கேள்வி எழுப்புகிறார். ஆகவே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கோரிக்கை அடிப்படையில் சாலை வரியை உயர்த்த கூடாது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *