• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

சேதமடையும் சாலை இரண்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி..,

ByKalamegam Viswanathan

Nov 27, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மழையால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு சேதம் அடையும் சாலையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறி நெடுஞ்சாலை துறையினர் 100க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றியதன் காரணமாக சாலையில் ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டது. மேலும் கழிவுநீர் கால்வாயும் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் மழை காலங்களில் கழிவுநீரும் மழை நீரிருடன் கலந்து தெருக்களில் ஆறாக ஓடியது இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் தற்போது வரை சேதமடைந்த சாலையை சீரமைக்க வில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக மாறி வருகிறது. குறிப்பாக அரசு மேல்நிலைப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக பகுதி சமுதாய கூடம் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சாலையில் தேங்கியுள்ள மழை நீர் குடிநீருடன் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது சேதமடைந்த சாலைகளை இரண்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உடனடியாக முள்ளிப்பள்ளம் கிராமத்தில் சேதம் அடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் மற்றும் சாலையின்
இருபுறமும் உள்ள கழிவுநீர் கால்வாய்களை புதிதாக அமைத்து கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.