மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 89 பூங்காக்களையும் டிசம்பர் 7-ந்தேதிக்குள் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும், தூய்மைப்படுத்தியதற்கான கேமரா பதிவுகளை மாநகராட்சி கமிஷனர் கோர்ட்டில் வருகிற 7-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

ஆய்வு பணி
ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து 89 பூங்காக்களையும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை முதல் ஆய்வு செய்து வருகின்றனர். பூங்காக்களின் தற்போதைய பராமரிப்பு நிலை, தூய்மைப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அறிக்கை சமர்ப்பிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



