• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை காலமானார்

Byதரணி

Apr 18, 2023

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின், தந்தை உடல்நலக்குறைவு காராணமாக காலமானார்.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக இருந்து வருகிறார். இவரது தந்தை தவசலிங்கம் (93) உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் வயது மூப்பு மற்றும் சிகிச்சை பலனின்றி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தந்தை காலமானார்.
ராஜேந்திரபாலாஜி தந்தை நேற்று 8.40 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி சடங்கு திருத்தங்கல் பாலாஜி நகரில் அவரது இல்லத்தில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரின் தந்தை மறைவையொட்டி, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.