• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் கே..டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் உறசாக வரவேற்பு!

Byகுமார்

Sep 24, 2021 ,

விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஊரகஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய மதுரையிலிருந்து விருதுநகர் மாவட்ட வழியாக வருகை தந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமிக்கு விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல் சூரங்குடியில் விருதுநகர் மாவட்ட அதிமுக கழகம் சார்பாக முன்னாள் அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை 100% வெற்றி பெற செய்ய வைக்கும் வகையில் 9 மாவட்டங்களிலும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கழக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி ஆலோசனை வழங்கி வருகின்றார்.

இந்நிலையில் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழக வேட்பாளர்கள் 100% வெற்றி பெறச்செய்ய செய்ய வைக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் செய்கின்றார் தென்காசி மாவட்டத்திற்கு தேர்தல் பிரசரத்திற்கு செல்லும் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட எல்லையான ஆவல்சூரம்பட்டி விலக்கில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக முன்னாள் அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் மாவட்ட கழக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.

மேளதாளங்கள் முழங்க விருதுநகர் ராமர் கோவில் சார்பாக பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னால் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எதிர் கோட்டை சுப்பிரமணியன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் கழக மகளிரணி துணை செயலாளருமான சந்திரபிரபாமுத்தையா, அவைத்தலைவர் வக்கீல் விஜயகுமார் , இலக்கிய அணி மாவட்ட செயலாளரும் மாவட்ட கவுன்சிலர் மச்சராஜா, மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் தர்மாலிங்கம், கண்ணன், நகர கழக செயலாளர் முகம்மது நெயினார் , விருதுநகர் தகவல் தொழில் நுட்ப அணியின் நகர செயலாளர் சரவணன், நகர அம்மா பேரவை செயலாளர் கணேஷ் குரு, நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாக சுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் (வேட்பாளர்) சக்தி பாலன், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.