

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியில் வரும் மே மாதம் 24, 25 ஆகிய இரண்டு தினங்கள் முதலாம் ஆண்டு மின்னொளியில் கபடி போட்டி நடத்தப்படுகிறது. கபடி போட்டிக்கு தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைக்க வருகை தர வேண்டுமென சேர்வைக்காரன்பட்டி ஊர் பொதுமக்கள், கபடி கிளப் அணியினர் சார்பில், அழைப்பிதழ் வழங்கப்பட்டன. அதனை ஏற்று அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கபடி போட்டியை தொடங்கி வைக்க வருகை தருவதாக உறுதி அளித்தார்.

தொடர்ந்து கபடி போட்டியை சிறப்பாக நடத்த ரூபாய் 20000 நிதியாக வழங்கினார். நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சேர்வைக்காரன்பட்டி ஊர் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


