“அண்ணா சக்கரை கம்மியா ஒரு டீ போடுண்ணா” என்று அன்புடன் கேட்ட பெண்மணிக்கு, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உடனே டீ போட்டு கொடுத்தார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பேருந்து நிலையத்தில் நடந்த இச்சம்பவம் சுவாரஸ்யமாக இருந்தது.
https://arasiyaltoday.com/book/at25072025
ஜூலை 24, 25ஆம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புரட்சித்தமிழர் எழுச்சிப்பயணம் செய்ய வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை வரவேற்று இலுப்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோகளில் விளம்பரங்களை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போது அங்கிருந்த பெண்களுக்கு டீ வாங்கி கொடுத்தார். அப்போது அங்கிருந்து ஒரு பெண்மணி எனக்கு நீங்க டீ போட்டு குடுங்க அப்படின்னு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்த டீக்கடையில் தானே டீ போட்டு கொடுத்த முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர்.
பின்னர் அங்கிருந்த பூக்கடை, பழக்கடை, மளிகை கடைகளுக்கு , பொதுமக்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் இலுப்பூர் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் குரு பாபு, நகர செயலாளர் சத்யா மணிகண்டன், மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கருப்பையா உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பொதுமக்கள் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
