• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

Byமதி

Dec 4, 2021

தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரோசய்யா இன்று காலமானார்.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோசய்யா காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பியாக இருந்தவர். ஆந்திர மாநில முதலமைச்சராக ரோசய்யா 2009-ம் ஆண்டு முதல் 2010 வரை பதவி வகித்துள்ளார். தமிழக கவர்னராக ரோசய்யா 2011 முதல் 2016 வரை பணியாற்றி உள்ளார். தமிழக ஆளுநராக ரோசய்யா 2011 முதல் 2016 வரை பணியாற்றி உள்ளார்.

88 வயதான அவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டு காலம் சுயநினைவில்லாமல்  ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.  இந்நிலையில் இரத்த அழுத்தம் காரணமாக இன்று காலை உயிர் பிரிந்தது.