காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 84.கடந்த சில நாட்களுக்கு முன்பு தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.