

பாஜகவில் இருந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மீண்டும் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தத்தின் போது, மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்எல்ஏவாக இருந்த மாணிக்கம் ஓபிஎஸ் ஆதரவாக செயல்பட்டார். இதன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 எம்எல்ஏக்களில் மாணிக்கமும் ஒருவர். இவர் அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைந்தார். பாஜகவில் கூட்டுறவு பிரிவு மாநில தலைவராக இவர் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் முன்னாள் சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம் தற்போது மீண்டும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அடிப்படை உறுப்பினராக கட்சியில் இணைந்தார். அதிமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மாணிக்கம், மீண்டும் அதிமுகவிற்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
