

மனவெளி தொகுதி சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில், 1000 பேருக்கு இலவச புடவை மற்றும் பிரியாணி வழங்கி கொண்டாட்டப்பட்டது.
புதுச்சேரி மணவெளி தொகுதி அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையடுத்து ஆயிரம் பேருக்கு இலவச புடவை மட்டும் பிரியாணி வழங்கப்பட்டது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் விழா மணவெளி தொகுதி அதிமுக நிர்வாகி குமுதன் புருஷோத்தமன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி மனவெளி சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியவர் 1000க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக புடவை மற்றும் சிக்கன் பிரியாணியும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தொகுதி அவை தலைவர் மூர்த்தி, மாநில விவசாய அணி பார்த்தசாரதி, எம்ஜிஆர் மன்றம் பாண்டுரங்கன், மனவெலி வார்டு நிர்வாகிகள் தர்மேந்திரன், வாசு, ஜெயராமன், சேது, கணேசன், ஜானகிராமன், இளங்கோ ரமேஷ் பூர்ணங்குப்பம் கார்த்தி தயாளன் அருள்மணி, ஆல்வமணி, ராஜா மதன் முத்துக்குமார் மண்ணாங்கட்டி உள்ளிட்டஅதிமுக மனவெளி தொகுதி நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.


