• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய பாஜக முன்னாள் எம்.பி..!

மத்தியபிரதேச மாநிலத்தின் முதல்வர், மக்களவை உறுப்பினர், மத்திய அமைச்சர், பாஜக துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த உமா பாரதி தற்போது எந்த பதவியிலும் இல்லாத நிலையில், தொடர்ந்து பல்வேறு அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அவர் சமீப காலமாக வலியுறுத்தி வருகிறார். மேலும் இதற்காக பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறார். இந்த சூழலில் வரும் 15-ஆம் தேதிக்குள் மத்திய பிரதேசத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். ஆனால் அவரது பேச்சுக்கு மாநில அரசு செவிசாய்க்காமல், அதற்கு மாறாக வெளிநாட்டு மதுபானங்கள் வரியை குறைத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த இவர் போபாலில் உள்ள ஒரு மதுக்கடைக்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்று அங்கிருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கி உள்ளார்.