• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸில் இணைந்த முன்னாள் பாஜக முதல்வர்

ByA.Tamilselvan

Apr 17, 2023

சீட் கிடைக்காததால் பாஜக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் அக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதாவில் சீட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார். அவர் காங்கிரஸ் வேட்பாளராக நிற்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகின. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், சித்தராமையா முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இன்று இணைந்தார். ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸ் தரப்பில் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.