• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

PM – 2 யானையை “ட்ரோன்” கேமரா மூலம் தேடும் வனத்துறை…

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கரளிகண்டி வனப்பகுதியில் கூடலூர் உதவி வன பாதுகாவலர் தலைமையில் கூடலூர் வனச்சரக பணியாளர்கள் ,பந்தலூர் வனச்சரக பணியாளர்கள் ,நாடு காணி வனச்சரக பணியாளர்கள் மற்றும் வன உயிரின கால்நடை மருத்துவ குழுவினருடன், PM 2 மக்னா யானையின் கால் தடத்தை வைத்தும் டிரோன் கேமரா மூலம் யானையை தேடும் பணியில் ஈடுபட்டது.

தற்போது யானை முண்டக்கொல்லி வனப்பகுதிக்குள் யானை தென்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த யானை இரவு நேரத்தில் வாச்சிக்கொல்லி , புளியம்பாறை, மரம்பிலா கோல்கேட், கோழிப் பாலம் பகுதிகளுக்கு வர வாய்ப்புள்ளது.

எனவே அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் கவனமாக இருக்கவும் என வனத்துறை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.