• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு “ப்ரின்ஸ்” மாஸ் தீபாவளி தான்.

ByA.Tamilselvan

Oct 21, 2022

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மாஸ் என்டர்டைன்மெண்ட் ப்ரின்ஸ் தீபாவளி தான். சிறுகுழந்தைகள் முதல் பலதரப்பட்ட ரசிகர்களை பெற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது.
டாக்டர், டான் ஆகிய இரு சூப்பர்ஹிட் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ப்ரின்ஸ் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. தெலுங்கில் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அனுதீப் மீதும், சத்யராஜ் – சிவகார்த்திகேயன் காம்போ மீதும் ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். இத்தைகைய எதிர்பார்ப்பை ப்ரின்ஸ் முழுமையாக பூர்த்தி செய்தாரா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்..
நகைச்சுவை, காதல், ரொமான்ஸ், டைமிங் என பக்காவாக நடித்துள்ளார். குறிப்பாக நடனத்தில் பின்னியெடுக்கிறார். நடிகை மரியா தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் உள்ளதை திருடிவிட்டார். அழகாக வந்து அளவான நடிப்பை காட்டியுள்ளார்.எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதே கதாபாத்திரமாக திரையில் வாழ்பவர் நடிகர் சத்யராஜ். தனக்கு கிடைத்து ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதமாக ஸ்கோர் செய்து அசத்திவிட்டார். முதல்முறையாக வித்தியாசமாக திரையில் தெரிந்த பிரேம்ஜியின் நடிப்பு ரசிக்கக்கூடியதாக இருந்தது.
சிவகார்த்திகேயனின் நண்பர்களாக நடித்துள்ள சதீஸ், பிராங்க்ஸ்டர் ராகுல், பாரத் என மூவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர். நடிகர்கள் சூரி மற்றும் ஆனந்த்ராஜ் சில நிமிடங்கள் வந்தாலும் திரையரங்கை அதிரவைத்துவிட்டார்கள்.முதல் தமிழ் படமாக இருந்தாலும் அருமையாக கையாண்டுள்ளார் இயக்குனர் அனுதீப். இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் அந்த நாட்டின் மக்களை காயப்படுகிறது என்பதையும், அவர்களுடைய வாழ்வாதாரத்தையும், உறவுகளையும் எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதையும் அழகாக காட்டியுள்ளார். குடும்ப ரசிகர்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ள திரைக்கதைக்கு தனி பாராட்டுக்கள்.
சில இடங்களில் ஒர்க்கவுட் ஆகாத நகைச்சுவை இருந்தாலும் மொத்தத்தில் இந்த தீபாவளி அணைத்து சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மாஸ் என்டர்டைன்மெண்ட் ப்ரின்ஸ் தீபாவளி தான்.