தென்மாவட்ட ஒருங்கிணைந்த கலைஞர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுபுறக்கலைஞர்கள் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் ஆட்டம், தவில்,மேளதாளத்துடன் மதுரை ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.
அம்மனுவில், தமிழ்நாடு இயல்,இசை, நாடக மன்றத்தின் தலைவராக திரைப்பட நடிகர் வாகை சந்திரசேகர் மற்றும் செயலாளராக மூத்த கலைஞர் டி.சோமசுந்தரம் ஆகியோரை நியமனம் செய்தற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் நாட்டுப்புறக்கலைஞர்களின் ஐந்து அம்ச கோரிக்கைகளான இரண்டு வருடங்களாக கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுபுறக்கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும், இலவச பேருந்து பயண அட்டை, தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்களில் சென்று வர இலவச பாஸ் வழங்க வேண்டும் என பலவேறு கோரிக்கைளை முன்வைத்தனர் .
தமிழ்நாடு குடிசை மாற்று வாராயத்தின் கிழ் நாட்டுபுறக்கலைஞர்களுக்கு மானியத்தில் வீடு வழங்க வேண்டும் எனவும், தமிழகத்தில் உள்ள சிறு சிறு கோவில்களில் விழாக்களை நடத்திட உத்தரவிட வேண்டும் என்றும் இந்த கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற பட்ஜெட் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.













; ?>)
; ?>)
; ?>)